நவம்பர் 10 முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 14-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஒரு சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
அதாவது ,டெல்லி மற்றும் நாடு முழுவதும் கடந்த ஆண்டு தரவுகளின் படி காற்று தரக் குறியீடு மோசமாக இருந்த பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் இன்று நள்ளிரவு (நவம்பர் 9-ஆம் தேதி ) முதல் நவம்பர் 30 -ஆம் தேதி நள்ளிரவு வரை தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில், பட்டாசு வெடிக்க டெல்லி, ஓடிசா மாநிலங்கள் தடை விதித்திருந்த நிலையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…