உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடி விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
டி.ஏ.பி. உரங்களுக்கான மானியத்தை ரூ.1,650 லிருந்து ரூ.2,501-ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் ரூ.512 ஆக இருந்த டி.ஏ.பி. உர மானியம், 2021-22-ல் ரூ.1,650 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.2,501-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடி விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுபோன்று, ஜம்மு காஷ்மீரில் ரூ.4,526 கோடியில் 540 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், நக்சல் பாதிப்புள்ள இடங்களில் 2ஜி சேவையில் இருந்து 4 சேவை வழங்க ரூ.1,840 கோடியில் கட்டமைப்பு ஏற்படுத்தவும், தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் “பிரதான் மந்திரி சவான் நிதித் திட்டம் மூலம் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தொடரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் தொழிலை இழந்த தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை கடன் உதவி பெற இந்த திட்டம் வகை செய்யும்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…