#BREAKING : பொறியியல் மற்றும் பாலிடெக்னீக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு…!

Default Image

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு. 

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. B.E.,B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500, அதிகபட்சமாக ரூ.1,94,100 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என்று ஊதியம் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக்கில் கற்பிக்கப்படும் டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.67,900 எனவும், அதிகபட்சமாக ரூ.1,40,900 ஆகவும் கட்டணம்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தை குறைக்க கூடாது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் AICTE  அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்