#BREAKING: மரபணு சோதனை நடத்த மத்திய அரசு அதிரடி முடிவு.!
வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியாவிற்கு வந்த அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த சில வாரங்களாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வைரஸானது 70% அதிக வேகத்துடன் பரவும் தன்மை கொண்டது என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தன. பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோன வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கும் உறுதியானது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியாவிற்கு வந்த அனைவருக்கும் மரபணு (DNA) சோதனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மரபணு சோதனை நடத்துவதற்காக நாடு முழுவதும் 10 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி விஷயத்தில் விரைவில் நல்ல செய்தி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அறிகுறி உள்ள மற்றும் தோற்று உறுதியான பயணிகளுக்கு மரபணு சோதனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரது மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு உருமாறிய கொரோனாவா என பரிசோதனை செய்யப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.