#BREAKING: வருமான வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு! – மத்திய அரசு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவைக் மார்ச் 15 வரை நீட்டித்தது மத்திய அரசு.
2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அரசிவித்துள்ளது. வருமான வரித் துறையும் இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா பரவல் காரணமாக வரி செலுத்துவோர்/பங்குதாரர்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
On consideration of difficulties reported by taxpayers/stakeholders due to Covid & in e-filing of Audit reports for AY 2021-22 under the IT Act, 1961, CBDT further extends due dates for filing of Audit reports & ITRs for AY 21-22. Circular No. 01/2022 dated 11.01.2022 issued. pic.twitter.com/2Ggata8Bq3
— Income Tax India (@IncomeTaxIndia) January 11, 2022