#BREAKING: நீட்தேர்வை ஒத்திவைக்க முடியாது- உச்சநீதிமன்றம் அதிரடி.!
நீட் தேர்வினை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ள நீட்தேர்வை ஒத்திவைக்க கோரி 20 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, நீதிபதிகள் நீட்தேர்வில் ஒத்திவைக்க கோரி மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டனர். மேலும், சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் எதுவும் செய்ய இயலாது என கூறி புதியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியது.
கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜேஇஇ தேர்வுகள் மற்றும் நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் தேர்வுகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.