#BREAKING: தேர்வில் முறைகேடு -ரயிலுக்கு தீ வைப்பு..!
பீகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர்.
ரயில்வே தேர்வுகள் கடந்த செப்டம்பர் 2019 இல் நடத்தப்பட திட்டமிடப்பட்டது. பிறகு தற்காலிகமாக மார்ச் 2020-க்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், இந்தியாவில் பரவிய கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020 ஏப்ரல்-ஜூலை-க்கு இடையில் ஒவ்வொரு நாளும் இரண்டு ஷிப்டுகள் என CBT-1 தேர்வானது 68 நாட்களுக்கு 133 ஷிப்டுகளில் நடைபெற்றது.
இந்த CBT-1 க்கான முடிவுகள் ஜனவரி 14, 2022 அன்று அறிவிக்கப்பட்டன. இதற்கிடையில், அடுத்த கட்ட CBT-2 தேர்வு பிப்ரவரி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பீகாரில் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும் , இதனால் CBT 2 தேர்வை ரத்து செய்து தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கயாவில் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் CBT 2 தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி போராடிய தேர்வர்கள் ரயிலுக்கு திடீரென தீ வைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. தேர்வர்கள் ரயிலுக்கு தீ வைத்துள்ளனர். அவர்களில் சிலரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் என கயா எஸ்எஸ்பி ஆதித்ய குமார் கூறினார்.