#BREAKING : பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்…!
பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், டெல்லியில் உள்ள நாடாளுமனற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர். நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல், சசிகலா விவகாரம், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமித்ஷாவை சந்திக்க ஈபிஎஸ் – ஓபிஎஸ் நேற்று இரவு வரை காத்திருந்த நிலையில், தற்போது தாமதமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.