#BREAKING: ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வரும் 13-ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 2-ஆம் தேதி நேற்று ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு சம்மன் அளிக்கப்பட்டியிருந்தது. வெளிநாட்டு பயணம் காரணமாக நேற்றைய விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகவில்லை என தகவல் கூறப்படுகிறது.
எனவே, வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்தி அவகாசம் கேட்டதை அடுத்து, விசாரணைக்கு ஆஜராக புதிய தேதியை அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக வரும் 13-ஆம் தேதி ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.