BREAKING: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8.30 மணி வரை நடத்தப்பட்டது. விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன் என்று கெஜ்ரிவால் கூறினார்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.