#Breaking:அமலாக்கத்துறை ,சிபிஐ இயக்குனர் பதவிகாலம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு- குடியரசுத்தலைவர் ஒப்புதல்!

அமலாக்கத்துறை ,சிபிஐ இயக்குனர் பதவிகாலம் 5 ஆண்டுகள் நீட்டிக்கும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்.
அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் இந்திய அரசு அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதிகபட்சம் 3 ஆண்டுகள் என இருந்த பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீடிப்பு செய்ய அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.தற்போது நாடாளுமன்றம் நேரடியாக செயல்படவில்லை என்பதால்,நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவில்லை.
எனினும்,இந்த மாதம் இறுதியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடும் என்று கூறப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே,அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இயக்குநர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் இந்த சட்டம் தற்போது அவசரச்சட்டமாக கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
The Government of India brings Ordinance to extend the tenure of Enforcement Directorate (ED) and Central Bureau of Investigation (CBI) Directors up to 5 years. pic.twitter.com/r6NZ8cLyJS
— ANI (@ANI) November 14, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025