#BREAKING: மின்சார சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல்!
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மின்சார சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்.
மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் தாக்கல் செய்யவுள்ளார். மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதனிடையே, மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மின்வாரிய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மசோதா தாக்கல் செய்யப்படும் நாளன்று அதாவது இன்று, மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தம் செய்வார்கள் என மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.