முதியோர், குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல் -மத்திய அரசு.!

Default Image

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 173 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் 4 பேர் இறந்துள்ளனர்.

இன்று மத்திய அரசு பல அறிவுறுத்தலை கூறியுள்ளது.அதில் அனைத்து விளையாட்டு போட்டிகள் மற்றும் பொது கூட்டம் ஒத்திவைக்கவும், அவசர ,அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வீட்டிலே பணியாற்ற வேண்டும் .

மத்திய அரசின் பி ,சி  பிரிவு பணியாளர்களில் 50% பேர் வீட்டிலிருந்தே வேலை செய்ய  அறிவுறுத்தபட்டு உள்ளது மேலும் 10 வயதுக்குட்பட்டவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் .

மாணவர்கள் ,நோயாளிகள் தவிர மற்றவர்களுக்கான ரயில் ,விமான கட்டண சலுகைகள் ரத்து எனவும்  தனியார் துறையினர் முடிந்தவை வீட்டில் இருந்து பணியாற்றவே வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்