#BREAKING :டெல்லியில் நில அதிர்வு.!

தலைநகர் டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. ஸ்ரீநகர், சண்டிகர், மதுரா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ஹிந்துகுஷ் பகுதியில் மையமாக கொண்டு நில அதிர்வு ரிக்டர் அளவில் 6.8 ஆக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது.