நாட்டின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார்.
நாட்டின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக வருகை தந்து பதவியேற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்வின் போது குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்புக்கு முன்பு, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திரௌபதி முர்மு அவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைப்படை வீரர்கள் புடை சூழ பதவி ஏற்பு விழாவுக்கு வந்த திரவுபதி முர்மாவை நாடாளுமன்றத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கயா நாயுடு வரவேற்றனர்.
குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், முதல் பழங்குடிப் பெண், மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…