#Breaking:கவலை வேண்டாம்…2 லட்சத்திற்கு கீழ் சரிந்த தினசரி கொரோனா பாதிப்பு;ஒரே நாளில் 2.54 லட்சம் பேர் குணமடைவு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,67,059 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 1192 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,14,69,499 ஆக உள்ளது.
- இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,09,918 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,67,059 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 42,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,14,69,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,192 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,96,242 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,54,076 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,92,30,198 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 17,43,059 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாடு முழுவதும் இதுவரை 1,66,68,48,204 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 61,45,767 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.