#BREAKING : ராகுல் தகுதி நீக்கம் – உச்சநீதிமன்றத்தில் மனு…!
ராகுல் காந்தி அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குகளில் தண்டனை பெற்றவுடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும் முறையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. உடனடியாக தகுதி நீக்கம் செய்வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க கோரியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3) அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.