#BREAKING: 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் கட்சி பதிவு நீக்கம் – தேர்தல் ஆணையம்
பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாவிட்டால் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்படும் என கூறியுள்ளது.
மேலும், செயல்படாமல் இருந்த, பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் 253 கட்சிகள் செயலற்றவை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பதிவு செய்து, அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகள் செயல்படாமல் இருந்ததால் மே 25-அன்று அவற்றை பதிவு ரத்து செய்யப்பட்டது.
கடந்த ஜூனில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதவிவையும் ரத்து செய்தது. இதுவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறாத 284 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2014-ல் இருந்து 2019 வரையான காலத்தில் சட்டமன்ற தேர்தலிலோ நாடாளுமன்ற தேர்தலிலோ போட்டியிடாததால் கட்சி பதிவு நீக்கப்பட்டுள்ளது.