ராஜஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், 30 எம்.எல்.ஏ. தனக்கு ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என சச்சின் பைலட் அறிவித்தார்.
மேலும், நேற்று நடைபெற இருந்த மாநில சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை என அறிவித்தார். இந்த சுழலில் நேற்று முதலமைச்சர் அசோக் கெலாட் வீட்டில் சட்டசபைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், சச்சின் பைலட்டும், அவருக்கு ஆதரவாக இருக்கும் சில எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பாக இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சச்சின் பைலட் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று தனியார் சொகுசு விடுதியில் அசோக் கெலாட் நடத்திய கூட்டத்தில் 102 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டை காங்கிரசிலிருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றியதாகவும், இதனால் தற்போது, துணை முதல்வர் பதவியில் இருந்தும், காங்கிரசிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…