#BREAKING : ஸ்புட்னிக் லைட் 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி மறுப்பு…!

டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான 3-வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி மறுப்பு.
இந்தியாவை பொறுத்தவரையில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற தடுப்பூசிகளுக்கு 3-வது கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம், டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான 3-வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி மறுத்துள்ளது.
மற்ற தடுப்பூசிகள் 2 தவணையாக செலுத்தப்படும் நிலையில், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி ஒரே தவணையில் போடப்படும் தடுப்பூசியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தடுப்பூசியால் ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு தற்காலிக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025