#BREAKING: டெல்லி வன்முறை ..! பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..! ராணுவத்தை வரவழைக்க கெஜிர்வால் கோரிக்கை .!
டெல்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் கோரிக்கை வைத்து உள்ளார்.
டெல்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையை டெல்லி போலீசாரால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனவே வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் உள்துறை அமைச்சர் அமித் ஷா விற்கு கோரிக்கை வைத்து உள்ளார். மேலும் டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 18- ஆக இருந்த நிலையில் தற்போது 20 ஆக உயர்ந்து உள்ளது.
நேற்று முன்தினம் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், பஜன்புரா போன்ற பகுதிகள் கலவர பூமியாக மாறியது.
இந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி கொண்டனர். இந்த சம்பவத்தால் நேற்று 13 பேர் உயிரிழந்தனர்.அதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இன்று குருதேக் பகாதூர் மருத்துவமனை நிர்வாகம் மேலும் 5 பேர் உயிரிழந்தாக கூறியதால் பலி எண்ணிக்கை 18- ஆக உயர்ந்து இருந்த நிலையில் மேலும் 2 பேர் இறந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை 20- ஆக உயர்ந்துள்ளது.