நேற்று ஒரேநாளில் நடத்திய சோதனையில் டெல்லி அமைச்சர் வீட்டில் இருந்து ரூ.2.82 கோடி பணத்தை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை.
டெல்லி மாநிலம் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.82 கோடி ரொக்கம் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்க நாணயங்களை அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று, சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், பணம், நகைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பணபரிவர்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நேற்று ஒரேநாளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அமைச்சர் வீட்டில் இத்தனை கோடி ரூபாய் மற்றும் இத்தனை கிலோ தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி அரசின் அமைச்சர் சத்யேந்தர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…