#BREAKING: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ராஜினாமா!

Default Image

சிபிஐயால் கைது செய்யப்பட்டதை அடுத்து டெல்லி துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் மணிஷ் சிசோடியா.

மதுபான கொள்கை – மணிஷ் சிசோடியா கைது:

liquid26

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா சுமார் 8 மணிநேரம் சிபிஐ விசாரணைக்கு பின் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்பதால் 5 நாள் காவலில் மணிஷ் சிசோடியாவை விசாரிக்க அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.

சிசோடியாக்கு 5 நாள் சிபிஐ காவல்:

manishcbi26

புதிய மதுமான கொள்கை முறைகேடு புகாரில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்த நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்திருந்தது.

மணிஷ் சிசோடியா ராஜினாமா:

DELHICASE28

இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கைதாகியுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார். மணிஷ் சிசோடியாவின் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார். மேலும், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமா கடிதத்தையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.

அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா:

Satyendar Jain

ஹவாலா பண மோசடி வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைதாகி சிறையில் உள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். மதுபான கொள்கை முறைகேடு வழக்கிலும் சத்யேந்தர் ஜெயினிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், டெல்லி அரசில் ஒரே நேரத்தில் இன்று முறைகேடு வழக்கில் துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பான சூழலை உருவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்