குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், குடியரசு தின அணிவகுப்பு விழாவில் கலந்துகொள்ளும் அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வதற்காக தெளிவான வழி முறைகள் கடைபிடிக்கப்படுகிறது . முதல் மூன்று சுற்றுகள் வரை தமிழக ஊர்தி பரிசீலிக்கப்பட்டது, இறுதிப் பட்டியலில் தமிழக ஊர்தி இடம் பெறவில்லை. நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே குடியரசு தின அணிவகுப்புக்கான ஊர்தி தேர்வு செய்யப்பட்டது. 2017, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழக ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…