#BREAKING: முலாயம் சிங் யாதவ் மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி ட்வீட்

Default Image

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர் என  பிரதமர் மோடி ட்வீட்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நிலை குறைவால் இன்று காலமானார். கடந்த ஒரு வாரமாக ஹரியானாவின் குருகிராமில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் ஐயூசிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்தது. உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பல்வேறு மாநில அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நாங்கள் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோது முலாயம் சிங் யாதவ் ஜியுடன் பலமுறை தொடர்பு கொண்டுள்ளேன். நெருங்கிய தொடர்பு தொடர்ந்தது, அவருடைய கருத்துக்களைக் கேட்க நான் எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக, வலிமையான இந்தியாவுக்காக உழைத்தார். அவரது பாராளுமன்ற தலையீடுகள் தேசிய நலனை மேம்படுத்துவதில் வலியுறுத்தப்பட்டது. முலாயம் சிங் யாதவ் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்டவர். மக்களின் பிரச்னைகளை உணரும் ஒரு தலைவராக அவர் பரவலாகப் போற்றப்பட்டார். மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தார். லோக்நாயக் ஜேபி, டாக்டர் லோஹியாவின் கொள்கைகளை பரப்ப தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்