#BREAKING: பான் கார்டு – ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!
பான் கார்டு – ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிப்பு.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. விலக்கு பெற்றவர்கள் தவிர்த்து, வருமான வரிச் சட்டம் 1961-இன் கீழ் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும், தங்களுடைய ஆதார் கார்டை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
பான் – ஆதார் இணைப்பு:
இதனால் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அவர்களுடைய ஆதார் கார்டை இணைப்பது அவசியமானது. ஆனால், இன்னும் பலர் தங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை. இதனால் பல முறை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக வரும் 31ம் தேதிக்குள் பான் எண்ணை, ஆதாருடன்இணைக்க வேண்டும் என வருமானத்துறை தெரிவித்திருந்தது.
அபராதம்:
கால அவகாசம் முடிவதற்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு செயலிழந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, அபராதம் போன்ற தண்டனைகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் முடிவடைய இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் நிறையப் பேர் இணைக்காமல் உள்ளனர்.
கால அவகாசம் நீட்டிப்பு:
இந்த நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வரும் 31-ம் தேதிக்குள் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் வரி ரீஃபண்ட் பெற இயலாத நிலை உள்ளது. இந்நிலையில், வரி செலுத்துவோர் பயன்பெறும் வகையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1, 2023 முதல், இணைக்கப்படாத PAN ஆனது விளைவுகளுடன் செயலிழந்துவிடும். ரூ.1,000 அபராத கட்டணம் செலுத்திய பிறகு, ஆதாரை பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிக்கு தெரிவித்தவுடன், 30 நாட்களில் மீண்டும் பான் எண்ணை செயல்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைக்கும் முறை:
வரி ஏய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் கார்டுடன் – ஆதார் எண்ணை இணைக்க வருமான வரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. வருமான வரித் துறையின் https://www.incometax.gov.in/iec/foportal என்ற வெப்சைட்டில் சென்று பான் கார்டுடன் – ஆதார் எண்ணை இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
In order to provide some more time to the taxpayers, the date for linking PAN & Aadhaar has been extended to 30th June, 2023, whereby persons can intimate their Aadhaar to the prescribed authority for PAN-Aadhaar linking without facing repercussions.
(1/2) pic.twitter.com/EE9VEamJKh— Income Tax India (@IncomeTaxIndia) March 28, 2023