வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் – Paytm

Default Image

Paytm வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து திடீரென ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பணம் பரிமாற்றம் செய்யும் Paytm செயலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், புதிய பதிவிறக்கங்கள் அல்லது அப்டேட்டுகள் செய்ய கூகுள் பிளே ஸ்டோரில் Paytm Android பயன்பாடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இது மிக விரைவில் கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Paytm வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் உங்கள் Paytm பயன்பாட்டை விரைவில் இயல்பாக தொடர்ந்து பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூதாட்டக் கொள்கைகளை மீறியதற்காக Paytm ஐ பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்