BREAKING: கர்நாடக மாநிலத்தில் 14 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு.!
கர்நாடக மாநிலத்தில் கோலார், உடுப்பி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், முதற்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் 19 நாள்கள் ஊரடங்கை நீடித்து பிரதமர் மோடி அறிவித்தார்.
இதையெடுத்து , மே 03 -ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதுவரை, இந்தியாவில் 29,435 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 6,869 பேர் குணமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் 512 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கோலார், உடுப்பி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் நிபந்தையுடன் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் , தொழிற்சாலைகளில் 50% ஊழியர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.