#BREAKING: ஜன.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Default Image

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு.

கொரோனா மற்றும் ஓமைகாரன் தோற்று பரவலை தடுக்கும் விதமாக புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு செய்து புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

  • திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.
  • உணவகங்கள், பார்கள், மதுபானக்கூடங்களில் 50% பேருக்கு அனுமதி.
  • மால்கள், வணிக நிறுவனங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.
  • சலூன், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்களில் 50% வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.
  • வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி.
  • கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளிகளை நடத்த அனுமதி.
  • கோயில் குடமுழுக்களை பக்தர்கள் இன்றி நடத்தி கொள்ளவும் அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்