#Breaking: நாடு முழுவதும் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு.!

நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் UNLOCK 1.0 என்று வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பது பற்றி ஜூலையில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும். மேலும் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 8-ல் முதல் கட்ட தளர்வுகள் வழிபாட்டு தலங்கள், விடுதிகள், உணவகங்கள், ஷாப்பிங் மால் ஆகியவை திறக்க அனுமதி.
- 2ம் கட்ட தளர்வுகளில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும்.
- பெற்றோர்களுடன் மாநில அரசு ஆலோசனை நடத்தி கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து முடிவெடுக்கலாம்.
- கொரோனா தாக்கத்தை பொறுத்தே சர்வதேச விமானநிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படும்.
- 3ம் கட்டத்தில் மெட்ரோ ரயில், சினிமா ஹால், நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும்.
- தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தொற்றின் தாக்கத்தை பொறுத்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு.
- மாநிலங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்துக்கு, சரக்கு போக்குவரத்துக்கு தடையில்லை – இ – பாஸ் தேவையில்லை.
- இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.