#BREAKING: பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் – உச்ச நீதிமன்றம்
பள்ளிகளில் ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை.
பள்ளிகளில் மாணவர்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதை கட்டாயமாக்கலாம் என்றும் பணியிடங்களில் விசாகா வழிமுறைகள் இருப்பது போல் பாலியல் தொலையில் இருந்து பள்ளி குழந்தைகளை காக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
விசாகா கமிட்டி போல் பள்ளிகளிலும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது பதிலளிக்க அனைத்து மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.