#BREAKING: கோவிஷீல்டு தடுப்பூசி விலை இரு மடங்கு அதிகரிப்பு.!!
கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை உயர்த்தியது புனேவை தலைமையிடமாக கொண்டுள்ள சீரம் நிறுவனம்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவிஷீல்டின் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.400 என உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, ரூ.250-க்கு கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.