#BREAKING: கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் – மத்திய அரசு
வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாக இருக்கும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்ககைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் தட்டுப்பாடு, வெண்டிலேட்டர் மற்றும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்று நிலைமை இருக்கிறது. இந்த நிலையில், வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது.
மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை என்றும் ஆனால் இதுதான் நிதர்சனம் எனவும் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் மோசமான சூழலை நாம் முழு அளவில் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும், நாடு முழுவதும் ஆக்சிஜன் சப்பளை உள்ளிட்டவற்றை சுமுகமாக மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.