#Breaking: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 5 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் கொரோனா பாதிப்பால் 63 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் 4 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 5 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. அதில் 23 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025