இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கொவிட்-19 வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. கொரோனோ வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169ஐ எட்டியுள்ளது. மேலும் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தற்போது பஞ்சாப்பை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…