#Breaking: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31ஆக உயர்வு.!
சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வரதன், கொரோனா வைரஸ் தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கம் ஒன்றை அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மார்ச் 4ம் தேதி வரை இந்தியாவில் 29பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து நேற்றிய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்தது. இதில் உத்திரப்பிரதேசத்தின் காஸியாப்பத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று சுகாதாரத் துறை அமைச்சர் கூறினார்.
தற்போது டெல்லியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்து மற்றும் மலேசியா சென்று டெல்லி திரும்பியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஹர்ஷ வரதன் தெரிவித்துள்ளார்.