#BREAKING : கொரோனா வைரஸ் தான் நமது மிகப்பெரிய எதிரி – பிரதமர் மோடி

- நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை.
- கொரோனா வைரஸ் தான் நமது மிகப்பெரிய எதிரி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அதன்படி, தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த உரையில், கொரோனா வைரஸ் தான் நமது மிகப்பெரிய எதிரி. அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். நாடு முழுவதும் இதுவரை 23 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய இயக்கமாக மாற்றியுள்ளோம்.
கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம், தனி மனித இடைவெளி முக்கியமான ஒன்று. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.