#BREAKING: அடுத்தவாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – மத்திய அரசு..!
கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான முன்னோட்ட நடவடிக்கை அடுத்த வாரம் தொடக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகையே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி பல நாடுகளில்உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்து செல்லப்படும்..? எப்படி பதப்படுத்தி வைக்கப்படும் அதன் பிறகு எந்த தேதியில், எந்த நேரத்தில் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி சரியான முறையில் நடக்க வேண்டும்.
இதில் எந்தவித குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆந்திரா, அசாம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான முன்னோட்ட நடவடிக்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.