காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். அதில், லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, ராகுல் காந்தி மேற்கு வங்கம் சென்று ஒரு நாள் முழுவதும் தொடர்ச்சியாக பரப்புரையில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரையை கைவிட்டுள்ளேன் என்றும் இதை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் ராகுல் காந்திக்கும் கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தேவையான மருத்துவ வசதிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…