#BREAKING : 13 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை..!

Default Image

உச்சநீதிமன்றத்தில் 32 நீதிபதி உள்ள நிலையில் 13 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றால், அரசியல்,  சினிமா பிரபலங்கள் மற்றும் காவலர்கள், நீதிபதிகள் என முக்கியமானவர்கள் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.

அந்த வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி ரமணா அவர்கள் கவலை தெரிவித்துள்ளார். ஒரு வழக்கை விசாரித்த போதுதான் இந்த தகவலை தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் 32 நீதிபதி உள்ள நிலையில் 13 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் 8 பேருக்கு உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது 13 பேருக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும், பலர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தங்களது அறையில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். மேலும் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்