சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளை ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியானது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தோ்வுகளை நடத்த மாணவா்களின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
பொதுத் தோ்வு நடத்துவதற்கு எதிராக பெற்றோா் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில், இந்தியாவில் கொரோனா பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலையை அடையும் என எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பொதுத் தோ்வுகளை நடத்துவது லட்சக்கணக்கான மாணவா்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகும்.
மேலும், 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேர்வை ரத்து செய்து, நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளுக்கு உள் மதிப்பீட்டுத் தோ்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்திரவு விட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து குறித்து முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசும், சிபிஎஸ்இ-யும் பதில் கொடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் முடிவு செய்துள்ளதாகவும், சிபிஎஸ்இ தேர்வு நடத்த இயலாது என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கருத்து தெரிவித்துள்ளனர் என மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…