#Breaking:தொடர்ந்து சரியும் கொரோனா;ஆனால்,ஒரே நாளில் 201 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,396 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 201 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,51,556 ஆக உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 6,561 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 6,396 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 150 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,29,51,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 142 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 201 ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,14,589 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 13,450 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,67,070 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 77,152 ஆக இருந்த நிலையில்,தற்போது 69,897 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,78,29,13,060 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 24,84,412 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.