#BREAKING: கேரளாவில் ஒரே நாளில் 32,819 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

கேரள மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக 32,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 5170 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 2,47,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 1,41,199 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 1,53,54,299 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 18,413 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதுவரை 12,07,680 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கோழிக்கோடு 5015, எர்ணாகுளம் 4270, மலப்புரம் 3251, திருச்சூர் 3097, கோட்டயம் 2970, திருவனந்தபுரம் 2892, பாலக்காடு 2071, கண்ணூர் 1996, ஆலப்புழா 1770, கொல்லம் 1591, பதனம்திட்டா 1163, வயநாடு 968, காசர்கோடு 906 மற்றும் இடுகி 859 என பாதிக்கப்பட்டிள்ளனர்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 5,27,662 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 5,06,202 பேர் வீட்டு / நிறுவன தனிமைப்படுத்தலின் கீழும், 21,460 மருத்துவமனைகளில் உள்ளனர்.