#Breaking:கடந்த ஒரே நாளில் 2,541 பேருக்கு கொரோனா;30 பேர் பலி!

Published by
Edison

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,541 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,593 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் ஆக 2,541 குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,60,086 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 44 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆக குறைந்துள்ளது. இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,22,223 ஆக பதிவாகியுள்ளது.கடந்த ஒரே நாளில் 1862 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,21,341 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16,522 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 1,87,71,95,781 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 3,64,210 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Recent Posts

இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!

இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…

33 minutes ago

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…

1 hour ago

உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!

சென்னை :  தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

2 hours ago

AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…

2 hours ago

“தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை., 2026-ல் வரலாறு படைப்போம்!” – விஜய் பேச்சு.

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…

2 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!

சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…

3 hours ago