#Breaking:கடந்த ஒரே நாளில் 2,541 பேருக்கு கொரோனா;30 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,541 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,593 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் ஆக 2,541 குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,60,086 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 44 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆக குறைந்துள்ளது. இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,22,223 ஆக பதிவாகியுள்ளது.கடந்த ஒரே நாளில் 1862 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,21,341 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16,522 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 1,87,71,95,781 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 3,64,210 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025