#Breaking:கடந்த 24 மணி நேரத்தில் 1,549 பேருக்கு கொரோனா;31 பேர் பலி!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,761 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,549 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 200 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,09,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை:
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 127 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,16,510 பேர் உயிரிழந்துள்ளனர்.
குணமடைந்தோர்:
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2652 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,67,774 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சிகிச்சை:
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 26,240 ஆக இருந்த நிலையில்,தற்போது 25,106 ஆக குறைந்துள்ளது.
தடுப்பூசி:
நாடு முழுவதும் இதுவரை 1,81,24,97,303 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 2,97,285 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.