ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து 106 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு நில அதிர்வு ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (ஆக. 24) நண்பகல் சுமார் 12.35 மணியளவில் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
சென்னை – ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.சென்னையில் இருந்து கிழக்கு – வடகிழக்கு திசையில் சுமார் 320 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக, தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் முன்னதாக அறிவித்தது.
இந்நிலையில்,அடுத்ததாக ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து மேற்கு-தென்மேற்கில் 106 கிமீ தொலைவில் இன்று காலை 11:15 மணியளவில் மிதமான அடர்த்தி கொண்ட நில அதிர்வு ஏற்பட்டது. உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
மேலும்,இது தொடர்பாக இன்று காலை 11:15 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு கொண்ட நில அதிர்வு ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு 106 கிமீ மேற்கு-தென்மேற்கில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல,அருணாசலப் பிரதேசம்,பாங்கினுக்கு வடக்கே 1193 கிமீ தொலைவில் இன்று காலை 05:08 மணிக்கு 5.1 ரிக்டர் அளவிலான மிதமான நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…