கடந்த 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 7 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் முடங்கியது.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு பின் இன்று 8-வது நாளாக மீண்டும் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்ட நிலையில், 8-வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. அதன்படி, எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்து செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது நாடு முழுவதிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் அவரை அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து முழக்கமிட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று 8-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…