#BREAKING: காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் இன்றிரவு டெல்லி வர உத்தரவு!

Default Image

காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் அனைவரும் இன்றிரவு டெல்லி வர கத்தியின் தலைமை உத்தரவு. 

காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் இன்று இரவு டெல்லிக்கு வர வேண்டும் என அக்கட்சியின் தலைமை திடீர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை சம்மன், அக்னிபத் திட்டம், குடியரசு தலைவர் தேர்தல் என பல விவகாரம் தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையில் ராகுல் காந்தி நாளை மீண்டும் ஆஜராக உத்ராவிடப்படலாம் என்கின்ற சூழலில் கடுமையாக போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வரும் 23-ஆம் தேதி சோனியா காந்தி ஆஜராகவும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், எம்பி, எம்எல்ஏக்கள் டெல்லி வர உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்