#BREAKING: கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து இல்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு.!
கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைகக்கு எதிராக கல்லுரி மாணவர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கொரோனா அச்சுறுத்தலால் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தாமல் தேர்வை ரத்துசெய்ய மாணவர்கள் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக யு.ஜி.சி.யை மாநிலங்கள் அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.